Take a fresh look at your lifestyle.

குறிஞ்சிப் பூ போல தமிழ் சினிமாவில் மீண்டும் பூத்துள்ள ரோஜா!!

4

குறிஞ்சிப் பூ போல தமிழ் சினிமாவில் மீண்டும் பூத்துள்ள ரோஜா!!
பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கின்ற குறிஞ்சி பூவை போன்று தமிழ் சினிமாவுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்பி இருக்கிறது இந்த ரோஜா பூ. தனது வசீகர புன்னகையாலும், இயல்பான நடிப்பாலும் 90களில் ரசிகர்களை கவர்ந்து வந்தவர் ரோஜா.1992ம் ஆண்டு செம்பருத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பிரசாந்த், விஜய் அஜித் பிரபுதேவா என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது இயக்குனர் ஆர் கே செல்வமணி காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஆந்திரா மாநில அரசியலிலும் ஈடுபட்டு அமைச்சராகி மக்கள் பணியில் ஈடுபட்டதால் சினிமா நடிப்பில் நீண்ட இடைவெளி அவருக்கு ஏற்பட்டது. 12 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து உள்ளார். லெனின் பாண்டியன் படத்தில் கங்கை அமரன் ஜோடியாகவும், பாரி இளவழகன் இயக்கத்தில் ‘அன்பே டயானா’ படத்தில் சேத்தனுக்கு மனைவியாகயும் நடித்துள்ளார். மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி இருப்பது குறித்து ரோஜா அளித்த பேட்டி வருமாறு:- ‘அன்பே டயானா’ படத்தில் மூன்று பசங்களுக்கு தாயாக நடித்துள்ளேன். வீட்டில் எல்லோரையும் கட்டுப்படுத்தும் தலைமையா சிரியர் போன்று தான் படத்தில் என் கேரக்டர் இருந்தது. நீண்ட இடை வெளிக்கு பிறகு நடித்தாலும் ‘என்ஜாய்’ பண்ணி நடித்தேன். விஜய் நடித்த ‘காவலன்’ படத்தில் அசினுக்கு அம்மாவாக நடித்திருந்தேன். படப்பிடிப்பு தளத்தில் விஜய் என்னை பார்த்து நீங்கள் அம்மாவாக நடிக்கிறீர்களா? என வியப்போடு கேட்டார். அவர் கேட்ட விதத்தை பார்த்ததும் எனக்கு பயம் வந்து விட்டது. ஏதோ தப்பு பண்ணி விட்டோமோ? நம்ப முடியாம கேட்கிறாரே? அம்மாவாக நடிப்பதற்கு ஒரு ஹீரோவே ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் ஜனங்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற பயம் எனக்குள் எழுந்தது.அதன் பிறகு அம்மாவாக நடிப்பதை நிறுத்தி விட்டேன். இனி சினிமா வேண்டாம் என முடிவு செய்து ரியாலிட்டி ஷோ பண்ணி ஜாலியாக இருக்கலாம் என்று முடிவு செய்து அதில் இறங்கினேன்.12 வருடத்திற்கு பிறகு மீண்டும் அம்மாவாக நடித்துள்ளேன். வில்லியாக குறைவான படங்கள் மட்டுமே நடித்துள்ளேன். எனக்கு ஸ்மைல்’ முகம். என்னை வில்லி என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். ஆனால் வில்லி கேரக்டர் தான் மக்கள் மனதில் நிற்கும் ஆர்.கே.செல்வமணி படங்களில் வில்லன் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லன் மன்சூர் அலிகானின் நடிப்பு மக்களிடையே பெரிய அளவில் பேசப்பட்டது. கிளாமராக பல படங்களில் நடித்ததால் ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ படத்தில் என்னை நடிக்க வைக்க கூடாது என்று பலர், டைரக்டர் விக்ரமனிடன் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் விக்ரமன் ‘ஸ்ட்ரிக்டா’ என் படத்தின் இந்த கேரக்டரை ரோஜா பண்ணினால் தான் சரியாக இருக்கும் என சொல்லி விட்டார்.அவர் உறுதியாக இல்லை என்றால் நான் ஒரு நல்ல படத்தை மிஸ் பண்ணி இருப்பேன். சிறந்த நடிகைக்கான விருதும் ‘மிஸ்’ ஆகி இருக்கும். அரசியலில் நான் வெற்றி பெற காரணம் சினிமா தான். மக்கள் எல்லா பிரச்சனையையும் மறக்க சினிமாவுக்கு வருகிறார்கள். சினிமா என்பது கடவுள் கொடுத்த வரம்,அதில் இருப்பது எங்களுக்கு கிடைத்த பாக்கியம் என்றார்.

பாக்ஸ்
உங்க வாரிசுகள் சினிமாவுக்கு வருமா? என் பசங்களை சினிமாவிற்கு கொண்டு வரக் கூடாது என நினைக்க வில்லை.என் பசங்க சினிமாவிற்கு வர விரும்பினால் நான் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பேன். என் பொண்ணு படிப்பு பைத்தியம். பையனுக்கு நடிக்க வேண்டும் என்று ஆசை வந்துள்ளது. 2 வருடமாக கேட்டு கொண்டே இருக்கிறான். முதலில் படிப்பில் ‘டிகிரி’ வாங்கு அப்புறம் நடிக்கலாம் என்று சொல்லிவிட்டேன். அம்மாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியது போல் நீங்கள் என்னையும் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என, செல்வாவிடம் கேட்டு கொண்டே இருக்கிறார்.

ஜெயலலிதா என் ரோல் மாடல்
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா தான் எனக்கு ரோல்மாடல். அதனால் தான் நான் சினிமாவிலும், அரசியலிலும் ஜெயிக்க முடிந்தது.