விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிக்கும் ‘ரணபாலி’
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படத்துக்கு ‘ரணபாலி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கீதகோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படங்களுக்குப் பிறகு இருவரும் ஜோடி சேரும் படம் இது. இதை ராகுல் சங்கிருத்யன் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இதில் ‘தி மம்மி’ படம் மூலம் பிரபலமான அர்னால்ட் வோஸ்லூ, சர் தியோடோர் ஹெக்டர் என்ற பிரிட்டீஷ் அதிகாரியாக நடிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.1850-களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் இது.பல உண்மைச் சான்றுகள், வாய்மொழி வரலாறுகள், காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படை யாகக் கொண்டு எடுக்கப்பட்டு ள்ளது. இப்படம் செப்டம்பர் 11-ல் வெளியாக இருக்கிறது.
Prev Post