சென்னையை உலகத் தரத்திலான மாநகரமாக மாற்றும் நோக்கில், *தமிழ்நாடு அரசு 3வது மாஸ்டர் பிளான் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.*
சென்னையை உலகத் தரத்திலான மாநகரமாக மாற்றும் நோக்கில், *தமிழ்நாடு அரசு 3வது மாஸ்டர் பிளான் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.*
சுமார் 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை பெருநகரப் பகுதிக்காக**, சர்வதேச தரத்தில் புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட உள்ளது. Vijay தலைமையிலான அரசு, சென்னையை உலகின் முன்னணி நகரங்களுக்கு இணையாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நகர்ப்புற வளர்ச்சி, போக்குவரத்து வசதிகள், குடிநீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் நவீன உள்கட்டமைப்பு உள்ளிட்ட அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இதற்காக சர்வதேச நகர்ப்புற திட்டமிடல் வல்லுநர்களுடன் இணைந்து புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. எதிர்கால மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் நகர விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படும் இந்த 3வது மாஸ்டர் பிளான், சென்னையின் வளர்ச்சிப் பாதையை அடுத்த பல ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கும் முக்கிய ஆவணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. விரைவில் 3வது மாஸ்டர் பிளான் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.