கைதி மோனிகாவின் டீன் ஏஜ் போட்டோ
லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை கண்டிப்பாக எடுப்பேன் எனக் கூறியுள்ள நிலையில், கைதி படத்தில் குழந்தையாக நடித்த மோனிகாவின் டீனேஜ் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற கைதி படத்தில் கார்த்தியின் ரீல் மகளாக நடித்தவர் தான் மோனிகா.சம்பள பிரச்னை எல்லாம் கிடையாது, அல்லு அர்ஜுன் படத்தை முடித்து விட்டு அடுத்து கார்த்தியுடன் கைதி 2 கண்டிப்பாக எடுப்பேன், எல்சியூவை நிறைவு செய்வேன், விக்ரம் 2, ரோலக்ஸ் படங்கள் வரும் என லோகேஷ் கனகராஜ் உறுதியாக பேசியுள்ளார். இந்நிலையில், மோனிகா இப்பவே ஹீரோயின் மெட்டீரியலாக மாறிவிட்டார் என்றும் கைதி படத்தில் கண்டிப்பாக கல்லூரி பெண்ணாகத்தான் வருவார் என்றும் கூறுகின்றனர்.
