Take a fresh look at your lifestyle.

ரீல்ஸ்களில் ட்ரெண்டான பூர்ணா டான்ஸ்

29

ரீல்ஸ்களில் ட்ரெண்டான பூர்ணா டான்ஸ்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படம் உருவாகி வருகிறது. வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதால் அதற்கான வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனது. அண்மையில், அனிருத் இசையமைப்பில் இதன் முதல் பாடலான, ’அல்ல பொல்லேலோ’ பாடல் வெளியானது. அதில் நடிகை பூர்ணா சிறப்பு நடனம் ஆடியிருந்தார். கேரள பாணி நடனத்துடன் கவரும் உடலசைவுகளையும் கொடுத்ததால் பூர்ணாவின் ஆட்டம் தனியாக ரசிக்கப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.ஜெயிலர் முதல் பாகத்தில் நடிகை தமன்னா, காவாலா பாடலுக்கு நடனமாடியிருந்தார். அப்பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதேபோல், இரண்டாம் பாகத்தில் பூர்ணா கவனம் ஈர்த்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமிலும் இப்பாடல் வரிகளைப் போட்டு பூர்ணா போன்றே நடனமாடி பலரும் ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.