Take a fresh look at your lifestyle.

கலிஃபா படம் மூலம் கம் பேக் கொடுக்கும் மோகினி

38

கலிஃபா படம் மூலம் கம் பேக் கொடுக்கும் மோகினி
1991-ம் ஆண்டில் வெளியான ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மோகினி. தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த மோகினி, திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனதால் சினிமாவில் இருந்து விலகினார். அதன் பிறகு 2011-ம் ஆண்டில் சுரேஷ் கோபியுடன் ஒரு படத்தில் கலெக்டர் கேரக்டரில் நடித்தார். இதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காத மோகினி 15 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் கலிபா படத்தில் முக்கிய கேரக்டரில் மோகினி நடித்துள்ளார். இப்படம் வரும் 20-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.