ஒன் மேன் படம் வரும் 21ல் ரிலீஸ்
உலகில் யாரும் செய்திடாத முயற்சியாக,இயக்குனர்,நடிகர் சங்ககிரி ராஜ்குமாரின் பெரும் முயற்சியில் ஒன் மேன் திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை எந்தவித உதவியாளர்களும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒற்றை மனிதனாகச் செய்து முடித்திருக்கிறார்.தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட படம் என்பதால், இது திரைப்பட விழாக்களுக்கான படமாக இருக்கும் என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால் கமர்சியல் அம்சங்களோடு ஆக்சன் படமாக உருவாகியுள்ளது.இதில் இடம் பெறும் அத்தனை கதாபாத்திரங்களிலும் சங்ககிரி ராஜ்குமாரே நடித்திருந்தாலும், படத்தைப் பார்க்கும்போது ஒவ்வொருவரும் தனித்தனி கதாபாத்திரங்களாகவே மனதில் தோன்றுகிறார்கள். மேலும், இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தான் எப்படி எடுத்தேன் என்பதை வேறு ஒரு கேமராவில் முழுமையாகப் பதிவு செய்து வைத்திருப்பது மேலும் கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
