Take a fresh look at your lifestyle.

மொதோ ராத்திரி -விமர்சனம்

30

மொதோ ராத்திரி -விமர்சனம்
நடிகர் ரிஷிகாந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தத் திரைப்படத்தில் மருதநாயகம் எனும் பெயரில் நடித்துள்ளார். தன்னுடைய காதல் தோல்வியால் ஏற்பட்ட வருத்தத்தில் துபாய் சென்ற ரிஷிகாந்த்தை சொந்த ஊருக்கு வரவழைத்து,அவருக்கும் அனிஷ்மாவிற்கும் திருமணம் செய்து வைக்கின்றனர்.அதே போல் வேறு ஒருவரை காதலிக்கும் அனீஷ்மாவை,குடும்பத்தாரின் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தனர். இதனால் முதலிரவு அன்று வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறார் அனிஷ்மா. அதன் பிறகு என்ன நடந்தது? முதல் ராத்திரி என்ன ஆனது? என்பதே படத்தின் கதை. முதல் படத்திலேயே இவ்வளவு கேரக்டர்களை உருவாக்கி,அதை சரியாக கொடுத்திருப்பது இயக்குநர் ராஜா கருப்புசாமியின் திறமையை காட்டுகிறது. இருப்பினும் முதல் பாதியில் காமெடியாக நகரும் கதை, இரண்டாம் பாதியில் நீளம் காரணமாக சற்று தடுமாறுகிறது. ஏராளமான படங்களில் சின்ன கேரக்டர்களில் நடித்த ரிஷிகாந்த், இதில் நாயகனாக பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். வெள்ளந்தி தனமான நடிப்பில் கவர்கிறார் அனிஷ்மா. இவர்களோடு அப்துல் லீ, பகவதி பெருமாள், சேத்தன், வெங்கடேசன் ஆகியோர் நடிப்பு ரசிக்க வைக்கிறது. படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.