காஃபி ரைட்ஸ் இல்லாத முருகன் பக்தி பாடல்
உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள், முருக பக்தர்கள் காப்புரிமையின்றிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் முதல் முதலாக ‘முருகர் யுகம் பிறந்தாச்சி ‘ பக்திப் பாடல் உருவாகி உள்ளது.புண்ணியம் பவுண்டேஷன் தயாரித்துள்ள இந்தப் பாடலை, திவோ மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், நடிகரு மான ஜெயம் எஸ்.கே.கோபி இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார். இவர் அரசியலிலிருந்து விலகி ஆன்மீகத்திற்குள் நுழைந்து முழுக்க முருக பக்தராக மாறியுள்ளார். இந்தப் பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார். அவர் பாடும் முதல் பக்திப் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இந்தப் பாடலுக்கு இசை அமைத்துள்ளார். இந்தப் பாடல் வரும் 25ம் தேதி மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது.
Prev Post
Next Post