மாரி செல்வராஜ், இளையராஜா கூட்டணியில் உருவாகும் “மஞ்சணத்தி”
‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், தொடர்ந்து ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வலுவான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும், அவர்களின் உணர்வுகளையும் ஆழமாக பதிவு செய்யும் அவரது படைப்புகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.அந்த வகையில் அவரது இயக்கத்தில் உருவாகும் 6-வது படமாக “மஞ்சணத்தி” உருவாகிறது. இந்த படத்துக்காக இளையராஜாவுடன் முதல் முறையாக இணைந்துள்ளார். இப்படத்தை நவ்வி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் தயாரிக்க பார்சூன் என்டர்டெயின் மென்ட் நிறுவனத்தின் சுஷாந்த் பிரசாத் இணைந்து தயாரிக்கிறார்.
Prev Post
