Take a fresh look at your lifestyle.

கட்டாளன் விமர்சனம்

8

கட்டாளன் விமர்சனம்
பழங்குடி மக்களை அடிமைகளாக வைத்துக் கொண்டு காட்டில் உள்ள யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தி வருகிறார் சுனில்.அவருக்கு போட்டியாக அதே இடத்தில் களமிறங்க துடிக்கிறார் கபிர்துகான் சிங். சுனில் கடத்த முயற்சித்த தந்தங்களை போலீஸ் உதவியுடன் கைப்பற்றுகிறார்.பறிபோன தந்தங்களை மீட்பதற்காக ஆண்டனி வர்கீசுடன் கைகோர்க்கிறார் சுனில். திடீரென ஆண்டனி வர்கீஸ் பழங்குடியின மக்களுக்கு உதவி செய்ய சுனிலுக்கும் ஆண்டனி வர்கீசுக்கும் மோதல் ஏற்படுகிறது. மோதலில் ஜெயித்தது யார்? என்பதே படத்தின் மீதி கதை.ஆண்டனி வர்கீஸ் கேரக்டருக்கு தகுந்தவாறு அவரது தோற்றம், உடல் மொழியும் உயிரூட்டுகிறது. வில்லன் கேரக்டரில் சுனில் மற்றும் கபிர்துகான் சிங்மிரள வைத்துள்ளனர். திடீரென படத்தினுள் நுழைந்த துஷாரா விஜயன் துப்பாக்கியுடன் சண்டையில் அதிரடி காட்டுகிறார்.கிளைமாக்ஸில் லோகேஷ் கனகராஜ் என்ட்ரி சூப்பர்.யானை தந்தம் கடத்தலை மையமாக கொண்டு வனப்பகுதியின் பின்னணியில் நடக்கும்கடத்தலையும் பழங்குடியின மக்களின் வலிகளையும் ஆக்சன் களத்தில் மிரட்டி உள்ளார் இயக்குனர் பால் ஜார்ஜ்.