Take a fresh look at your lifestyle.

சர்ச்சையை தொடர்ந்து சரண்டரான பூஜா ஹெக்டே

66

சர்ச்சையை தொடர்ந்து சரண்டரான பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே, வருண் தவானுடன் இணைந்து ஹாய் ஜவானி தோஷ்ஹோனா ஹை என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். வரும் 5-ந் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதையொட்டி நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் பூஜா ஹெக்டே உடன் செல்பி எடுக்க முயன்றார். அதை பொருட்படுத்தாமல் பூஜா கடந்து சென்றார். இந்த வீடியோ காட்சி சோசியல் மீடியாவில் வைரலாகி பூஜாஹெக்டேவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், சினிமாவிற்கு உயிர் கொடுப்பதே ரசிகர்கள் தான். அவசர சூழ்நிலை மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக ரசிகர்களை கவனிக்க முடியாமல் போகலாம். அதற்காக நடிகைகள் தலைக்கனம் பிடித்தவர்கள் என்று அர்த்த மல்ல. ரசிகர்கள் தான் எங்களின் பலம். அவர்கள் தெய்வங்களைப் போன்றவர்கள். எனவே கவனிக்காமல் நடந்த இந்த விஷயத்தை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் எனக் கூறியுள்ளார்.