Take a fresh look at your lifestyle.

ஜனனி ஜனனி… முதல் என் ஜோடி மஞ்ச குருவி… வரை ராஜாவின் ராஜ்ஜியம்

7

ஜனனி ஜனனி… முதல் என் ஜோடி மஞ்ச குருவி… வரை ராஜாவின் ராஜ்ஜியம்
இந்திய திரையுலகில் 50 வது ஆண்டு பொன் விழாவை எட்டியிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.முதல் நாள் பல வெளி நாட்டு இசை கலைஞர்கள் பங்கேற்று சிம்பொனியை நடத்தினார்.இரண்டாம் நாள், தனது முத்திரை பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.வழக்கம் போல் தனது முதல் பாடலான ஜனனி ஜனனி, அமுதே தமிழே என்று ஆரம்பித்து, இறுதி பாடலாக என் ஜோடி மஞ்ச குருவி பாடலை பாடி முடித்தார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் அம்மா சோபா சந்திரசேகர், வெற்றி மாறன், மாரி செல்வராஜ், ஜெயம் ராஜா, பிரதீப் ரங்கநாதன், ராதிகா சரத்குமார், நிரோஷா சத்யஜோதி தியாகராஜன், ஆர் சுந்தர்ராஜன், சந்தான பாரதி, யுவன் சங்கர் ராஜா, நாசர், பார்த்திபன் ஆர்.வி.உதயகுமார், கார்த்திக் சுப்புராஜ், தேவயானி ராஜகுமாரன், சுதா கொங்ரா, சாரங் தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர்.