கடவுளுக்கு நன்றி சொன்ன ஜோதிகா
நடிகை ஜோதிகா தற்போது மும்பையில் தங்கி, ஹிந்தி திரைப்படங்கள், இணையத் தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது, சோனாக்ஷி சின்ஹா உடன் அவர் நடித்து அமேசான் ஓடிடியில் வெளியான சிஸ்டம் படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து குவாஹாட்டியில் உள்ள காமக்ய தேவி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த அவர், இந்த தேவியிடம் ஆரம்பித்த பயணம் மகாலட்சுமியிடம் முடிந்துள்ளதாக கூறி, படத்தின் வெற்றியை கடவுளுக்கு சமர்ப்பித்த ஜோதிகா கூறியுள்ளார். இந்த படம் துவங்கப்பட்ட போது கணவர் சூர்யாவுடன் ஜோதிகா சென்று இருவரும் வழிபட்டனர். தற்போது சூர்யாவின் கருப்பு படமும் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Prev Post
Next Post