ஹீரோயினான பேட்மிட்டன் வீராங்கனை
காந்தி கண்ணாடி படத்திற்கு பிறகு கேபிஒய். பாலா அடுத்ததாக நடிக்க உள்ள படம் ‘ரீமேட்ச்’.சிறு வயது முதலே பேட்மிட்டன் விளையாட்டில் ஆர்வம் உள்ள பாலா இந்த கதையை கேட்டவுடன் ஒப்பு கொண்டுள்ளார். இதில் ஹீரோயினாக தானு ஹர்ஷா நடிக்கிறார். இவர் நாடகக் கலைஞர்,மாடல் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து பரிச்சயமானவர். அதோடு பேட்மிட்டன் வீராங்கனையும் ஆவார். மேலும் இளவரசு, சந்தோஷ் பிரதாப், ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன்,செல் முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய நடிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஆர்.விமல் குமார் இயக்கும் இந்த படத்திற்கு அர்வி ஒளிப்பதிவு செய்ய, அச்சுராஜாமணி இசை அமைக்கிறார்.சினிமா மீடியா அண்ட் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ்ராஜ்,பிரகாஷ் சேஷாத்ரி மற்றும் ரவி குமார் ஆகியோர் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர்.
Prev Post
Next Post