Take a fresh look at your lifestyle.

ஷர்வா நடிக்கும் ‘போகி’ பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

124

ஷர்வா நடிக்கும் ‘போகி’ பட பர்ஸ்ட் லுக் வெளியீடு
அதிரடி ஆக்சன் இயக்குநர் சம்பத் நந்தி இயக்கத்தில், நடிகர் ஷர்வா ‘போகி’ எனும் பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் கே. கே ராதா மோகன் தயாரிக்கிறார். இதனை லட்சுமி ராதா மோகன் வழங்குகிறார். ஷர்வாவின் திரையுலக பயணத்தில் மிக பிரம்மாண்டமான படைப்பாக இந்த திரைப்படம் தயாராகி வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் நேற்று வெளியிட்டனர்.இதில் நடிகர் ஷர்வா முரட்டுத்தனமான மற்றும் மூர்க்கத்தனமான தோற்றத்தில் இருக்கிறார். இதில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகியோர் ஹீரோயினாக நடிக்கிறார்கள்.