லிட்டில் விங்ஸ் குறும்படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியாஸ்
இயக்குனர் நவீன் இயக்கத்தில் உருவாகி உள்ள குறும்படம் ‘லிட்டில் விங்ஸ்’.21 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படம் மணிமேகலை என்ற முதிய பெண்ணின் தினசரி வாழ்க்கை முறையை மையமாக கொண்டு உருவாகி உள்ளது. இந்த குறும்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.இது குறித்து டிரீம் வாரியர்ஸ் நிறுவன அதிபர் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கூறியது, சினிமாவில் இன்று நிறைய விஷயங்கள் மாறியிருக்கிறது. புது கலைஞர்கள் வரும் போது அவர்கள் முதலில் குறும்படம் அல்லது இசை ஆல்பம் மூலம் தான் தங்களின் பயணத்தை தொடங்குவார்கள். இதன் மூலம் நல்ல திறமைசாலி களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கிறோம். இது வியாபார நோக்கத் தோடு செய்வதில்லை என்றார்.