அன்பில் அவன் படம் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்
அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகி உள்ள படம் அன்பில் அவன்.ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம், ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹேன்ஸ் செய்துள்ளார். இந்த படம் 25-ந்தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு வரும் அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாவில் அசோக் செல்வன் பேசியது, இந்த படத்தில் ஒரு காட்சியில் 38 அடி உயரத்தில் இருந்து டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து குதித்தேன். இனி மேல் என் பெயர் இருந்தால் அந்த படத்தில் என்னுடைய கடுமையான உழைப்பு இருக்கும். அது என்னோட பிராமிஸ். அன்பில் அவன் படம் ரொம்ப ஸ்பெஷலான படம் என்றார்.
Prev Post