Take a fresh look at your lifestyle.

மீண்டும் காலேஜுக்கு போனது போல் இருந்தது: மாளவிகா மோகனன்

3

மீண்டும் காலேஜுக்கு போனது போல் இருந்தது: மாளவிகா மோகனன்
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ‘இதயம் முரளி’ படம் கடந்த 10ம் தேதி வெளியானது. இதில் ப்ரீத்திமுகுந்தன், கயாடு லோஹர் ஆகியோருடன் யாரும் எதிர்பாராத விதமான மாளவிகா மோகனன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இது குறித்து மாளவிகா மோகனன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியது , “அழகான படத்தில் மகிழ்ச்சியான கேமியோ. அதில் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள்.. தமிழ் மணப் பெண் போல அலங்கரித்துக்கொண்டது. பகத் பாசிலுடன் ஒரு கலகலப்பான காட்சியில் நடித்தது. நாங்கள் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம், இணைந்து நடிப்பதற்காக சரியான படம் குறித்து பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் இப்போதைக்கு இந்தச் கேமியோவே போதுமானது என்று நினைக்கிறேன். இதயம் முரளி படத்தின் இளமையான மற்றும் உற்சாகமான குழுவினருடன் பணியாற்றியது, மீண்டும் கல்லூரிக் காலத்திற்கு சென்றது போல் உணர வைத்தது” என்றார்.