மிஸ்டர் பாரத் ரிலீஸ் அப்டேட் :
யுடியூப்பில் செம்ம ஹைபை உருவாக்கிய பாரத் மற்றும் நிரஞ்சன் ஆகியோர் இணைந்து மிஸ்டர் பாரத் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதிக்கின்றனர். இந்த படத்தை சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் தயாரிக்கின்றனர். இதில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பாலா சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர் ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவாளர் செய்ய, பிரணவ் முநிராஜ் இசையமைத்து ள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.