ஹாலிவுட் படத்தில் திஷா பதானி
பாலிவுட் நடிகை திஷா பதானி ‘கங்குவா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இவர் ஏற்கனவே ஜாக்கிசானுடன் ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். தற்போது ‘ஹாலி கார்ட்ஸ்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் ஹாலிவுட் சென்றுள்ளார்.இந்த படத்தை ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் கெவின் ஸ்பேசி இயக்கிறார். கடந்த ஜனவரி மாதம் படத்தின் முன்னோட்ட பகுதி மெக்சிகோ டுரோங்காவில் படமாக்கப்பட்டது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி
ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.
Next Post