Take a fresh look at your lifestyle.

எனக்கு அம்மா கேரக்டர் வேண்டாம்: மதுபாலா கெஞ்சல்

227

எனக்கு அம்மா கேரக்டர் வேண்டாம்:
மதுபாலா கெஞ்சல் (அ) கண்ணப்பா மூலம் எனது அம்மா இமேஜ் உடைந்து விடும்:  மதுபாலா

தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு திரைக்கதை வசனத்தில் உருவாகி உள்ள படம்’ கண்ணப்பா’. படத்தை முகேஷ்குமார் சிங் இயக்கியுள்ளார். இதில் மோகன் பாபு, சரத்குமார், பிரபாஸ்,மோகன் லால், அக்சய்குமார், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் 27-ந் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் சென்னையில் நடந்த ப்ரமோஷன் விழாவில் பேசிய மதுபாலா,இதில் பழங்குடி இன ராணியாக நடித்துள்ளேன். அதனால் கத்தியை என்னிடம் கொடுத்து அடிக்க சொன்னதும் எதிரே வந்த அனைவரையும் அடித்து துவம்சம் செய்து விட்டேன். இது போன்ற கேரக்டரில் நடித்தது மகிழ்ச்சி. எனக்கு இளம் அம்மா என்ற இமேஜ் இருக்கிறது. தற்போது அதை ‘கண்ணப்பா’ படம் உடைத்து போர் வீராங்கனை என்ற புதிய பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றார்.