இசை நிகழ்ச்சி நடுவரான ஆண்ட்ரியா
ஏ .ஆர். ரஹ்மான் தலைமையில் நடக்கும் தமிழ் ஐடியல் நிகழ்ச்சியின் முதல் ஆடிஷன் நாளை 23 அன்று சென்னை அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் நடைபெறுகிறது. இதில் 14 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த போட்டியின் நடுவர்களாக பிரபல பாடகர்கள் கார்த்திக், பென்னி தயாள், நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி சோனி விழா மற்றும் சோனி எல்ஐவி ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்து ஆண்ட்ரியா கூறியது, “தமிழ்நாடு முழுவதும் பல திறமையான பாடகர்கள் இருக்கின்றனர் அவர்களை சந்தித்து அவர்களின் கதைக ளையும், திறமைகளை யும் அறிந்து கொள்வதில் நான் மிகவும் ஆர்வமாக இருக்கின்றேன். புதிய குரல்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் மகிழ்ச்சி யடைகிறேன்.” என்றார்
Next Post
