Take a fresh look at your lifestyle.

ஒரு ஆசிரியையின் கதை தான் ஒரு நாள்

15

ஒரு ஆசிரியையின் கதை தான் ஒரு நாள்
ஸ்ரீ மாந்துருத்தி மாடன் தம்புரான் பிலிம்ஸ் சார்பில் வி.ஆர் விஜயலட்சுமி கதை எழுதி தயாரித்துள்ள படம் “ஒரு நாள்”.பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய விஜயவாசன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கதை நாயகியாக ஷாலு நடிக்க, சூரிய நாராயணன், உமர்,கலா, முத்துலட்சுமி, சூரிய சுப்பிரமணியன் ஆகியோர் கதா பாத்திரங்களாக நடித்துள் ளனர். படத்திற்கு குமார் ஒளிப்பதிவு செய்ய, ஆதிஷ் இசையமைத் துள்ளார்.போதைக்கு அடிமையான மாணவர்களை மீட்டெடுத்து நல்வழி படுத்தும் ஒரு ஆசிரியையின் கதை. இதன் படப்பிடிப்பு குருவாயூர், சாவக்காடு, வையம்பட்டி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 30 நாட்களாக ஒரேக் கட்டமாக நடைபெற்று முடிந்தது.படத்தில் ஒரே ஒரு குத்தாட்ட பாடல் இடம் பெற்றுள்ளது. இப்படம் சென்சார் செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.