என் வாழ்க்கையில மறக்க முடியாத தருணம்: அனகா
சூர்யா நடிப்பில் ரிலீசாகி வெற்றி பெற்ற கருப்பு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள அனக்கா மாயா ரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியது,மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியான காதல்; தி கோர் படத்தில் நான் நடித்திருந்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது சூர்யா ஒரு முறை அங்கு வந்தார்.எனக்கு அன்று படப்பிடிப்பு இல்லாததால் நான் வீட்டிலேயே இருந்தேன். இருந்தாலும், எனது உதவியாளர்கள் எனக்கு போன் செய்து, இன்று வீடியோ கால் சூட் இருப்பதாகக் கூறினார்கள். அதனால், நானும் வீடியோ காலில் வந்தேன். சற்று நேரத்தில் அந்த வீடியோ கால் சூட் முடிந்தது. உடனே மம்மூட்டி சார் நான் இன்னும் லைன்ல தான் இருக்கேனான்னு கேட்டு கிட்டே, ஜோதிகா மேடம் கிட்ட போனை கொடுத்தார். அடுத்த நிமிடம் எனக்கு முன்னாடி சூர்யா சார் நின்னுட்டு இருந்தாரு. என் வாழ்க்கையில மறக்க முடியாத தருணம் அது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Prev Post
Next Post