இயக்குநர் வேணு எலிடாண்டி இயக்கத்தில் உருவாகும் ’எல்லம்மா’ படத்தில் பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகிறார்.இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மமிதா பைஜு ஒப்பந்தமாகியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராவதால் இரண்டு மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் மமீதாவை கமிட் செய்துள்ளனர். இவரது நடிப்பில் பிரேம்லு, டியூட், கர உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும், இவரது நடிப்பில் விஜயின் ’ஜனநாயகன்’, சூர்யாவின் ’விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ உள்ளிட்ட படங்கள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.