Take a fresh look at your lifestyle.

விஷ்ணு விஷால் படத்தில் ரம்யா கிருஷ்ணன்

22

விஷ்ணு விஷால் படத்தில் ரம்யா கிருஷ்ணன்
நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் கடந்த 2022-ல் வெளியான கட்டா குஸ்தி படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. விஷ்ணு விஷாலே தயாரித்த இந்தப் படத்தை சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இயக்கியிருந்தார். தற்போது இதன் 2ம் பாகம் உருவாகியுள்ளது. வரும் ஜூலை 3ம் தேதி படம் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் கட்டா குஸ்தி 2 படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.இதில் இம்பாக்ட் பிளேயராக நடித்துள்ளார்.ஐபிஎல் போட்டியில்தான் இந்த இம்பாக்ட் பிளேயர் என்ற விதி இருக்கிறது. ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் பந்துவீச்சாளர் அல்லது பேட்டருக்குப் பதிலாக மாற்று வீரரைக் களமிறக்கலாம் என்பதுதான் அந்த விதி என்பது குறிப்பிடுகிறது.