Take a fresh look at your lifestyle.

‘ஆஃப் தி ரெக்கார்ட்’ பட ஹீரோவான பாலாஜி சக்திவேல்

19

‘ஆஃப் தி ரெக்கார்ட்’ பட ஹீரோவான பாலாஜி சக்திவேல்
இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர் களில், சிறப்பான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து திறமையான நடிகராக தன்னை நிலைநிறுத்தியவர்களில் பாலாஜி சக்திவேலும் ஒருவர். உணர்ச்சி, ஆழமும் யதார்த்தமும் கொண்ட கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்வு செய்து வரும் அவர், தற்போது 12 நிமிட பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் இரட்டை பரிமாணம் கொண்ட கதாநாயகனாக நடித்துள்ளார். ஏ.ஆர். முத்துராமன் எழுதி இயக்கியுள்ள இந்த பைலட் படத்தை ட்ரீம் ஃபிக்‌ஷன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் அவரே தயாரித்துள்ளார். இதற்கு பிரபாகரன் ஒளிப்பதிவு செய்ய, நரேந்தர் இசை அமைத்துள்ளார்.