ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் அண்டர் 18
மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எஸ் ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய படமான “அண்டர் 18” படத்தின் ஷூட்டிங் சென்னையில் பூஜை இடம் துவங்கியது. இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். மருத்துவ கனவுகளோடு வாழும் ஒரு அப்பாவி இளைஞன் எதிர்பாராத விதமாக ஒரு திட்டமிடப்பட்ட க்ரைம் நெட்வொர்க்கில் சிக்கிக்கொள்ள, அவனை மீட்க அவன் தந்தையும், தாயும் எடுக்கும் போராட்டமே “அண்டர் 18” படத்தின் கதையாகும்.
Next Post
