Take a fresh look at your lifestyle.

மகாராஷ்டிராவில் குதிரை பேரம்? அணி மாறும் சிவசேனா எம்.பி.க்கள்?

1

மகாராஷ்டிராவில் குதிரை பேரம்? அணி மாறும் சிவசேனா எம்.பி.க்கள்?

➤மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனாவின் 9 எம்.பி.க்களில் 6 முதல் 7 பேர் பாஜக கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனாவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

➤கட்சி மாறுவதற்காக ஒவ்வொரு எம்.பி.க்கும் தலா ரூ.15 கோடி வழங்கப்படுவதாக உத்தவ் தாக்கரே தரப்பு மூத்த எம்.பி. சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார். “வெறும் ரூ.15 கோடிதானா திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு (மமதா பானர்ஜிக்கு எதிராக திரும்பிய 20 எம்.பி.க்கள்) முன்பணமாக ரூ.4 கோடியும், அடுத்த 36 மாதங்களுக்கு தலா ரூ.1 கோடியும் கிடைத்திருக்கிறது,” என சஞ்சய் ராவத் பதிவை குறிப்பிட்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார்.

➤ “ஒரு எம்.பி.யின் குறைந்தபட்ச விலை ரூ.50 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.15 கோடி என்பது வெறும் முன்பணம் மட்டுமே. ஆனால், இந்த நபர்கள் ரூ.50,000க்கு கூட தகுதியானவர்கள் கிடையாது,“ என மஹுவா மொய்த்ராவுக்கு அளித்த பதிலில் சஞ்சய் ராவத் கடுமையாகச் சாடியுள்ளார்.

➤அதேநேரத்தில், உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனாவை நாடாளுமன்றத்தில் ஒரே அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாக தொடர்ந்து அங்கீகரிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனாவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அரவிந்த் சாவந்த் மக்களவை சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளார்.

➤ “எம்.பி.க்களை பணத்தால் கவர்ந்திழுக்க பா.ஜ.க முயற்சிக்கிறது, ஆனால் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். நாங்கள் பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்தை உறுதியாகப் பின்பற்றுபவர்கள்,” எனக் கூறியுள்ள உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா, நாளை (18.06.2026) காலை 11 மணிக்கு டெல்லியில் நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தில் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.