பசுமை மனிதராக மாறும் நடிகர்
தமிழில் பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா.
நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார்.தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளை மூலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க திட்டமிட்டுள்ளார். சென்னை ஆவடியில்நடந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளையின் 9வது ஆண்டு விழாவில் இதற்கான அறிவிப்பை நடிகர் சௌந்தரராஜா வெளியிட்டார். கடந்த 9 ஆண்டுகளில் 45,000 மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.
Next Post