Take a fresh look at your lifestyle.

கனடா டு கோலிவுட்

129

கனடா டு கோலிவுட்
கனடா நாட்டின் டோரண்டோ நகரில் வானொலி துறையில் புகழ்பெற்ற தமிழராக திகழ்பவர் ஆர்.ஜே. சாய். சினிமா மீது ஆர்வம் கொண்ட இவர், ஒரே நேரத்தில் 2 தமிழ் படங்களை தயாரிக்கிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். ஆர்.ஜே.சாய் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாக உள்ள படங்களுக்கு பிரெய்ன், ஷாம் தூம் என பெயரிட்டுள்ளார். இதில் பிரெய்ன் படத்தை தாதா, பவுடர் மற்றும் ஹரா ஆகிய படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்க, ஷாம் தூம் படத்தின் கதையை ஆர்.ஜே.சாய் எழுத நவீன் குமார் இயக்குகிறார். விரைவில் ஷூட்டிங் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு படம் வெளியாகும் என கூறியுள்ளார்.