கார்த்திக் சுப்புராஜை பாராட்டும் பூஜா ஹெக்டே
கூலி படத்தில் இடம்பெற்றுள்ள மோனிகா பாடல் மூலம் உலகப் புகழ் பெற்றுள்ள பூஜா ஹெக்டே சமீபத்தில் அளித்த பேட்டியில், பாலிவுட்டில் ஒரே மாதிரியாக கிளாமர் கேரட்டர்களில் நடிக்கவே அழைக்கின்றனர். நான் நடித்த தென்னிந்திய படங்களை அவர்கள் பார்ப்பதில்லை. முக்கியமாக, தமிழில் வெளியான ரெட்ரோ படத்தில் எனக்கு முற்றிலும் வேறொரு தோற்றத்தை கார்த்திக் சுப்புராஜ் கொடுத்தார்.நான் நடித்த ராதே ஷியாம் படத்தைப் பார்த்து, என்னால் ருக்மணி மாதிரியும் நடிக்க முடியும் என நம்பினார். அதுதான் நல்ல, திறமையான இயக்குநருக்கான அடையாளம். இதற்காக, நான் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
Prev Post
Next Post