Take a fresh look at your lifestyle.

ரஜிஷா விஜயனுக்கு சர்தார் 2 பட குழு கொடுத்த சர்ப்ரைஸ்

7

ரஜிஷா விஜயனுக்கு சர்தார் 2 பட குழு கொடுத்த சர்ப்ரைஸ்
தமிழ், மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ரஜிஷா விஜயன். தமிழில் அவர் நடித்த கர்ணன், ஜெய்பீம், சர்தார், பைசன் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. இவர் நடித்த மஸ்திஷ்கா மரணம் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது,சர்தார் 2 படத்தில் அவர் நடித்து வருகிறார்.பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கும் இப்படம் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதன் முதல் பாகம் 2022ல் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த 2-ம் பாகத்தில் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, ரஜியா விஜயன், மாளவிகா மோகனன் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் ரஜியாவின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில் ரஜிஷா விஜயின் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.