என் திறமைக்கேற்ற கேரக்டர் இதுவரை அமையவில்லை!!
நடிகை சாக்ஷி அகர்வால் ஓப்பன் டாக்
தமிழ் சினிமாவில் என்னதான் திறமை இருந்தாலும் லக் மற்றும் சக்சஸ் இருக்கும் நடிகைகளே முன்னணி ஹீரோயின்கள் இடத்தை பிடிக்க முடிகிறது. அதித திறமை இருந்தும் டாப் ஹீரோயின்கள் வரிசையில் வர முடியாத ஏராளமான நடிகைகளில் சாட்சியா அகர்வாலும் ஒருவர். பிறந்தது வட இந்தியா என்றாலும் படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்து, அதன் பிறகு எம்பிஏ பட்டம் பெற்று சினிமா மீது உள்ள ஃபேஷன் காரணமாக வெளிநாடு சென்று நடிப்பு பயிற்சி முடித்துவிட்டு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதோடு தற்காப்பு பயிற்சிகளான கராத்தே கும்பு கலரி உள்ளிட்ட மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றுத் தேர்ந்த சாக்ஷி அகர்வாலுக்கு இன்னும் தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கிடைக்காதது சற்று வருத்தம்தான். இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து வரும் அவர் தற்போது பெண் தொழில் முனைவோர் ஆகவும் மாறி உள்ளார்.கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து தரமான நியூட்ரிஷன் பார்களை தயாரிப்பு செய்து அறிமுகப்படுத்தி உள்ளார்.தனது சினிமா வாழ்க்கை மற்றும் பிசினஸ் குறித்து அவர் கூறியது வருமாறு:-‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’ உள்ளிட்ட பல முக்கிய படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறேன். இருந்தும் என் திறமைக்கேற்ற கேரக்டர் இதுவரை எனக்கு அமையாதது வருத்தம் தான். மக்கள் மனதில் எனக்கு நல்ல இடம் இருக்கிறது என்பதை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் அறிய முடிந்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன். திருமணத்துக்கு பிறகும் நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேடி பிடித்து நடிக்கிறேன். கடந்த ஐந்தாண்டுகளாக எனது ஆராய்ச்சி மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டதால் படங்களில் சரிவர நடிக்க முடியவில்லை. தற்போது என் கனவு திட்டமான பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனமான ஓக்கூ-வை தொடங்கிவிட்டேன். இதன் மூலம் தரமான நியூட்ரின் பார்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன். தற்போது தமிழில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ளேன் .அது விமன் சென்ட்ரிக் கதை , நான் தான் லீட் ரோலில் நடித்துள்ளேன். தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளேன். அடுத்து தமிழில் ஒரு புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.
நயன்தாரா, தமன்னா வரிசையில் நானும் ..
சினிமாவில் இன்றைக்கு நடிகைகள் பல தொழில் தொடங்கி தொழில் முனைவோராக மாறி வருகின்றனர். நயன்தாரா தமன்னா சினேகா ஜோதிகா ஆகியோர் வரிசையில் நானும் இன்று விமன் எண்டர்ப்பிரனர் ஆகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
