Take a fresh look at your lifestyle.

சென்னையில் அனிருத் நடத்தும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

80

சென்னையில் அனிருத் நடத்தும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
முன்னணி இளம் இசையமைப்பாளரான அனிருத் ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று சென்னையில் பிரம்மாண்டமாக இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கில் திரளும் இசை ரசிகர்களின் பாதுகாப்பு, பார்க்கிங் என ஏராளமான வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சி நடைபெறும் வகையில் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அத்துடன் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை டிஸ்ட்ரிக்ட் எனும் பிரத்யேக ஆப்பில் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் தொடங்குகிறது. அதற்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது. ஹுக்கும் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.