அமானுஷ்ய படத்தில் நடிக்கும் நட்டி
இயக்குநர் எம்.எஸ்.எஸ்.இயக்கத்தில் நட்டி லீட் ரோலில் நடித்து வரும் படம் நீலி. இந்த படத்தை உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கிறார்.2400 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வரலாற்று பின்னணியில் இந்த நீலி திரைப்படம் உருவாகிறது. அமானுஷ்ய படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில் இந்தப்படம் வரலாற்று பின்னணியில் உருவாக இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு.படம் குறித்து இயக்குநர் எம்எஸ்எஸ் கூறியது, இந்த படத்தின் கதையை கேட்டதுமே பிடித்துப்போய் இதில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டார் நடிகர் நட்டி. இரண்டு முக்கிய நாயகிகள் நடிக்கிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.