Take a fresh look at your lifestyle.

77

“உயிரிழந்த இளைஞர்
என்ன தீவிரவாதியா??”

உயர்நீதிமன்ற மதுரை கிளை
சரமாரி கேள்வி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர், போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது

போலீசாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் கோவில் காவலாளி அஜித் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது

உயிரிழந்த இளைஞர் என்ன தீவிரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினரா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆயுதம் ஏந்தி தாக்கினால், தற்காப்புக்காக காவல்துறையினர் தாக்குவதை ஏற்கலாம் என தெரிவித்துள்ளனர்

சாதாரண சந்தேக வழக்கில் விசாரணை எனும் பெயரில் தாக்கியது ஏன் என தெரியவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்

சட்டவிரோத காவல் மரணங்களை ஒருபோதும் ஏற்க முடியாது. கடந்த 4 ஆண்டுகளில், 24 காவல் மரணங்கள் ஏற்பட்டுள்ளன என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், 6 காவலர்களை மாவட்ட எஸ்.பி. பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார்