வனிதா கேரக்டர் அனைவர் மனதிலும் நிற்கும் :அஞ்சலி
ராம் இயக்கத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் ஃபீல் குட் படமாக உருவாகி உள்ள’பறந்து போ’ படம் ஜூலை 4 அன்று வெளியாகிறது. இப்படம் குறித்து அஞ்சலி கூறியது, “சில படங்களும் அதன் கதாபாத்திரங்களும் தான் நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். எனக்கு ‘பறந்து போ’ அப்படியான படம். வனிதா கதாபாத்திரம் நிச்சயமாக அனைவர் மனதிலும் நிற்கும். ராம் சார் ஸ்டைலில் ஒரு கமர்ஷியல் கதாபாத்திரம் வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படம் என்றார்.


