Take a fresh look at your lifestyle.

48 மணி நேரத்தில் உருவாகும்’ டெவிலன் ‘

105

48 மணி நேரத்தில் உருவாகும்’ டெவிலன் ‘
பிக்கய் அருண் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் டெவிலன்.இதில் முழுக்க முழுக்க புது முகங்கள் நடிக்க உள்ளனர். படத்திற்கு கமல்ஜித்சிங் இசை அமைக்க, டி.ஜே.பாலா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் நோபல் உலக சாதனைக்காக 48 மணி நேரத்தில் முழுபடத்தையும் எடுத்து முடிக்க இருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு கடந்த 28ஆம் தேதி மதியம் துவங்கி, இன்று 31-ந் தேதி மாலைக்குள் தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இன்று மாலையே படம் திரையிடப்படுகிறது. இது பற்றி இயக்குனர் அருண் கூறியது, 48 மணி நேரத்தில் படம் எடுப்பதற்காக ஒரு வருட காலம் நிறைய ஆய்வுகள் செய்தேன். இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு என அனைத்தையும் கற்றுக் கொண்டு நோபல் உலக சாதனை படமாக எடுக்க விண்ணப்பம் செய்தோம்.2 அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆய்வு செய்வார்கள்.இந்த படம் திகில், பேண்டசி, அறிவியல் கலந்து உருவாகிறது.