Take a fresh look at your lifestyle.

ரணபாலி பட ரிலீஸ் தேதி மாற்றம்

31

ரணபாலி பட ரிலீஸ் தேதி மாற்றம்
ராகுல் சங்கிருத்தியன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா, ஹாலிவுட் வில்லன் ஆர்ணால்டு வோஸ்லூ ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்து வரும் படம் ‛ரணபாலி”. வரலாற்றுப் பின்னணி கொண்ட அதிரடி திரைப்படமாக உருவாகிறது. தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் புரட்சிகர வீரராக நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.இந்த படம் துவங்கி அறிவிப்பு வீடியோ வெளியிட்ட போதே செப்டம்பர் 11ம் தேதி ரிலீஸ் என குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் இப்போது அக்டோபர், 16ம் தேதி வெளியாகும் என விஜய் தேவரகொண்டாவின் புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர். ராஷ்மிகாவின் காயம் காரணமாக படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் முடியவில்லையாம்.அதன் காரணமாக ரிலீஸ் தேதியை ஒரு மாதம் தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.