தமிழ் ரசிகர்களின் ஹார்ட்டுக்குள் சென்ற வாமிகா கபி
பஞ்சாப் மாநிலம் சண்டிகரைப் பூர்வீகமாகக் கொண்டவர் வாமிகா கபி. சிறுமியாக சில ஹிந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர்,2013ல் வெளிவந்த பஞ்சாபி படமான “மேரா 22 மைன் தேரா 22” மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து சில பஞ்சாபி படங்களில் நடித்தார். 2016ல் செல்வராகவன் இயக்கிய “மாலை நேரத்து மயக்கம்” படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் மலையாளம், ஹிந்தி, பஞ்சாபி மொழிகளில் நடித்தார். சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துள்ள “டிசி” படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க வந்தவருக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.படத்தில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள வாமிகாவுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். தியேட்டருக்குச் சென்று ரசிகர்களுடன் படத்தைப் பார்த்த அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் பாராட்டு தெரிவித்ததுடன், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Next Post
