கான் சிட்டி
கர்நாடகாவில் அர்ஜுன் தாஸ் மற்றும் அவரது மனைவி அன்னா பென் இருவரும் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் வடிவுக்கரசி, யோகி பாபுவும் ஹோட்டலில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற அர்ஜுன் தாஸ் மகன் அகிலனை ஒரு கும்பல் அனைவரும் கடத்தி விடுகிறது.பள்ளியில் உள்ள சிசிடிவி மூலம் கடத்திச் சென்றது யார் என்பதை பார்த்த உடனே ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். 7 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர்கள் எல்லாம் யார்?அவர்கள் என்ன மாதிரியான மோசடிகளை செய்து வந்தனர்? என்பதே படத்தின் மீதி கதை.
இந்த கதை பல படங்களை நினைவுப் படுத்தினாலும்,திரைக்கதையில் இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் விளையாண்டுள்ள விதம் தான் படத்தை கடைசி வரை ரசித்து, சிரித்து பார்க்க வைக்கிறது.அர்ஜுன் தாஸ் எதார்த்த நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய ஸ்டென்த். பல இடங்களில் திரைக்கதையை தாங்கி பிடிக்கிறார். அன்னா பென் தனது மெச்சூரி ட்டியான நடிப்பு மூலம் தூள் கிளப்புகிறார். யோகி பாபு மற்றும் அவருடைய அம்மாவாக நடித்துள்ள வடிவுக்கரசி ரெண்டு பேரும் கதைக்கு மிகப்பெரிய பலம். இவர்களோடு விடிவி கணேஷ், அருள்தாஸ், ராதா ரவி, இமான் அண்ணாச்சி,கல்யாண சுந்தரம் ஆகியோர் நடிப்பும் கட்சிதமாக உள்ளது. ஷான் ரோல்டன் இசையில் ஏமாறாதே.. ஏமாற்றாதே பாடல் மற்றும் பின்னணி இசை சூப்பர்.
Prev Post
Next Post