Take a fresh look at your lifestyle.

மாணவர்களின் உலக சாதனை..!

2

மாணவர்களின் உலக சாதனை..!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளனர். பள்ளியின் 400 மாணவர்கள் ஒரே நேரத்தில் இணைந்து, 400 வினாடிகள் தொடர்ந்து யோகாசனங்கள் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளனர். ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் உடல்நலத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் இந்த முயற்சி உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. மாணவர்களின் இந்த சிறப்பான சாதனை “நோபல் உலக சாதனை” புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டதுடன், பள்ளி நிர்வாகத்திற்கும் சாதனைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த வெற்றி மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது. மாணவர்களின் சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.400 மாணவர்கள் 400 வினாடிகள் தொடர்ச்சியான யோகாசனம் உலக சாதனை பதிவு பள்ளிக்கு சாதனைச் சான்றிதழ்