Take a fresh look at your lifestyle.

விஷமானமங்கலம் பகுதியில் போலி மருத்துவர் கைது!

2

 

விஷமானமங்கலம் பகுதியில் போலி மருத்துவர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட விஷமங்கலம் பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவம் பார்த்து வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் திருப்பத்தூர் மாவட்ட தலைமை மருத்துவர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் இன்று விஷமங்கலம் பகுதியில் சோதனை மேற்கொண்ட போது அங்கு பேராம்பட்டு பகுதியை சேர்ந்த

பெருமாள் என்பவரின் மகன் இளங்கோ ( 68 )என்பவர் பி-பார்ம் பார்மசி படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்தது கண்டறியப்பட்டது. மேலும் இவர் பத்தாண்டு காலமாக முறையாக மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது மேலும் அவரிடமிருந்து மருத்துவத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.