Take a fresh look at your lifestyle.

திஷாபதானியின் கவர்ச்சி விருந்து

1

திஷாபதானியின் கவர்ச்சி விருந்து
சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் திஷாபதானி. கவர்ச்சியான தோற்றத்திற்கு பெயர் பெற்ற திஷா பதானி அணிந்து வரும் ஆடைகள் எப்போதும் டிரெண்டிங்காக இருக்கும். அந்த வகையில் அவர் அக்ஷய்குமாருடன் நடித்த வெல்கம் டு ஜங்கிள் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் பங்கேற்ற திஷா பதானி அணிந்து வந்திருந்த ஆடை பேசும் பொருளானது. பச்சை நிறத்தில் கிளாமரான உடையணிந்து வந்த அவர் மேடை ஏறுவதற்கு கூட துணை தேவைப் பட்டது. அவர் மேடை ஏறும்போது அக்ஷய்குமார் கை கொடுத்து உதவினார். விழாவில் பெரிய ‘ஹைலைட்’ திஷாபதானி அணிந்து வந்த ஆடை தான். அந்த புகைப் படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.