Take a fresh look at your lifestyle.

ஒரு வருடமாக தாடி வளர்த்த நடிகர்

101

ஒரு வருடமாக தாடி வளர்த்த நடிகர்
‘ஒளடதம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நேதாஜி பிரபு. மெடிக்கல் மாபியாக்களைப் பற்றிப் பேசிய அந்தப் படத்தை அவரே தயாரித்தும் இருந்தார். அந்த படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார்.சிறு இடைவெளிக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுப்ப தால் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.அதற்காக தனது உடல் எடையை அதிகரித்து, சுமார் ஓர் ஆண்டாக தாடி வளர்த்து தோற்றத்தை மாற்றியுள்ளார். இந்த போட்டோ ஷூட்டில் 8 வித ஸ்டைலில், 8 வித மாறுபட்ட தோற்றங்களில் 15 மணி நேரத்தில் 30 உடைகள் மாற்றி எடுத்துள்ளார். இப்படிப்பட்ட தோற்றங்களில் 500-க்கும் மேற்பட்ட புகைப் படங்கள் எடுத்து இதுவரை யாரும் செய்யத் துணியாத வேலையை செய்துள்ளார்.