‘ லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ ஷூட்டிங் முடிந்தது
தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகி யுள்ள படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’. இதில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரகிடா, லிஸ்சி ஆண்டனி, சரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், இளவரசு, கவிதா பாரதி,சுப. வீரபாண்டியன் உட்பட பலர் நடித்துள்ளனர்.சுப. வீரபாண்டியன், கதைக்கு வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தை 2எம் சினிமாஸ் நிறுவனம் சார்பாக கே.வி. சபரீஷ் தயாரித்துள்ளார். டி.பிச்சஸ் சார்பாக இயக்குநர் தயாள் பத்மநாபனும் இணைந்து தயாரித்துள்ளனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இது படக்குழுவிற்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.
Prev Post
Next Post