Take a fresh look at your lifestyle.

ஹீரோவான தேவி ஸ்ரீ பிரசாத்

101

ஹீரோவான தேவி ஸ்ரீ பிரசாத்
சினிமாவில் பல ஆண்டுகளாக இசைத் துறையில் தனது இசை மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வரும் தேவி ஸ்ரீ பிரசாத், முதன்முறையாக ஹீரோவாக திரையில் அறிமுகமாகிறார். தனது இயல்புக்கும் எனர்ஜிக்கும் ஏற்ற கதையாக தேர்வு செய்திருக்கிறார்.இதில் நடிப்பதுடன், இசையையும் அவரே அமைக்கிறார். ‘யெல்லம்மா’ என்று டைட்டில் வைக்கப்பட்டு ள்ள இந்த படத்தை ‘பலாகம்’ புகழ் வேணு யெல்தண்டி திரைக்கதை எழுதி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சிரிஷ் தயாரித்துள்ளார். தில்ராஜு படத்தை வழங்குகிறார். மகர சங்கராந்தி தினத்தில் வீடியோ உடன் அறிவிப்பு வெளியானது.