யோகி பாபு தவணை முறையில் தான் ஷூட்டிங்கிற்க்கு வருவார்: கிச்சா சுதீப்
விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்க். இதில் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகிபாபு, தீப்சிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ்,கிச்சா கிரியேஷன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். அஜனீஷ் பி லோக்னாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய கிச்சா சுதீப், ஷூட்டிங்கிற்க்கு யோகி பாபு தவணை முறையில் தான் வருவார். இருந்தாலும் அவருக்காக காத்திருக்கி றோம் என்றால் அவரிடம் அவ்வளவு விஷயம் உள்ளது என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய யோகிபாபு ,நான் நடிக்கும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வருவதில்லை என்றும். பணம் மட்டும் வாங்கி கொள்கிறார் என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இது உண்மையில்லை .ஒரு நாள் கால் சீட் வாங்கி விட்டு பட போஸ்டரில் பெரிதாக எனது படத்தை போட்டு புரமோஷனுக்கு வா என்றால் நான் எப்படி வர முடியும். எனக்கு வேறு படத்தின் சூட்டிங் இருக்கும். அப்படி இருந்தும் ஒரு சில படங்களில் நான் பங்கேற்று உள்ளேன் என்றார்.
Prev Post
Next Post